அடங்காத சுசிலீக்ஸ்... புதிய ட்விட்டர் பக்கத்தில் அமலா பால் ஆபாசப் படங்கள் பதிவு! #SuchiLeaks

Another page created in the name of Suchithra Karthik in twitter #SuchiLeaks
OneIndia News : பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக செய்தி வெளியானதில் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்ட திரையுலகினர், இப்போது பீதியில் உறைந்து போயிருக்கின்றனர்.
சுசித்ரா கார்த்திக் (Suchitra_Karthi) என்ற புதிய பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் அமலா பால், பாபி சிம்ஹா, டிடி ஆகியோரின் அந்தரங்கப் படங்களை பதிவேற்றியுள்ளனர்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ், த்ரிஷா, சஞ்சிதா, அனுயா ஆகியோரின் அந்தரங்கப் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று அந்தக் கணக்கு முடக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு முன் புதிய ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில், சுசித்ரா புகைப்படத்துடன் உள்ள அந்தப் பக்கத்தில் ஏகப்பட்ட ஏ சமாச்சாரங்கள்.

ஞாயிற்றுக்கிழமை சின்மயி - அனிருத், திங்கள் கிழமை தனுஷ் - அமலா பால், செவ்வாய்க்கிழமை தனுஷ் - பார்வதி நாயரின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவேன் என்ற ட்விட்டும் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

சினிமா உலகின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுவேன் என்று இன்னொரு பதிவு கூறுகிறது.

ஒரு ஆபாச வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இன்னொரு ட்வீட்டில் நடிகர் பாபி சிம்ஹா போல ஒருவர் இளம் நடிகையுடன் (மான் கராத்தேயில் நடித்த ஒரு நடிகை) படுக்கையில் உள்ள படமும் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு பதிவில் டிடியும் ஒரு இளைஞரும் கட்டிப்பிடித்தபடி இருக்க, அதற்கு பவர் பாண்டி என தலைப்பிட்டு, பதிவேற்றியுள்ளனர். பவர் பாண்டி என்பது தனுஷ் இயக்கும் புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் டிடியும் நடிக்கிறார்.

இன்னும் என்னென்ன படங்கள், வீடியோக்கள் அரங்கேறப் போகின்றனவோ என அச்சத்தில் உள்ளனர் சினிமா பிரபலங்கள்.

Comments