தினமலர் செய்தி : சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று ( 16 ம் தேதி ) தாக்கல் செய்தார். நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இதுவாகும். முன்னதாக அவர் ஜெ., நினைவிடம் சென்று, பட்ஜெட் அறிக்கையுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் முதல்வர் பழனிசாமி தனியாக வந்து ஜெ., நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
குறிப்பு:
சட்டசபையில் பட்ஜெட் தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வந்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் பெயரை கேட்டறிந்த ஸ்டாலின், அதனை குறித்து வைத்துக்கொண்டார்.
Comments