அதிமுக.,வில் இணைகிறார்களா திமுக., எம்.எல்.ஏ.,க்கள்?

தினமலர் செய்தி : திருத்தங்கல் : திமுக எம்.எல்.ஏ.,க்கள் 50 பேர் அதிமுக.,வில் இணைய தயாராக உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார்.

அதிமுக பக்கம் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் :

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அப்போது, ‛சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது அவர், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி இருந்தால் அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் அவருக்கு சாதகமாக ஓட்டளித்திருப்பார்கள் என ஸ்டாலின் கணக்கு போடுகிறார். அதன் மூலம் ஆட்சியை பிடித்து விடலாம் என நினைக்கிறார். 

ஸ்டாலின் முதல்வராக முடியாது :

ஆனால் அப்படி ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி இருந்தால் திமுக எம்.எல்.ஏ.,க்கள் 50 பேர் எங்கள் பக்கம் வந்திருப்பார்கள். எங்களின் 122 எம்.எல்.ஏ.,க்களுடன், திமுக எம்.எல்.ஏ.,க்கள் 50 பேரும் சேர்ந்து எங்களின் பலம் அதிகரித்திருக்கும். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின். அது நடக்காது. ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வர் ஆகும் யோகம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Comments