ஜி.எஸ்.டி.,வரி விதிப்பு முறையை அமல்படுத் துவதற்கு,அனைத்து மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.தற்போதைய சூழ்நிலையில், ஜூலை, 1 முதல் இந்த வரி விதிப்பு முறையை, நாடு முழுவதும் அமல் படுத்துவதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. இது மிகப் பெரிய பணி; இதற்காக அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகின்றன.
அதனால், இதற்கு மேலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதில் தாமதம் ஏதும் ஏற்படாது; வரும், ஜூலை, 1 முதல், நாடு முழுவதும், இந்த வரி விதிப்பு முறை நிச்சய மாக நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டனின் லண்டன் நகரில் நடக்கும், பிரிட் டன் - இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியும், இந்த தகவலை உறுதி படுத்தினார்.
அந்த கூட்டத்தில் பேசுகையில், 'வரும், ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது' என, கூறியுள்ளார்.
முக்கிய அம்சங்கள்
* ஜி.எஸ்.டி., வரி விதிப்பு என்பது, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வருவது
* இதன் மூலம், நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப் படும், 17 வகையான வரி விதிப்பு முறைகள் கை விடப்படும்
* புதிய வரிவிதிப்பு முறையால், பொருட்களை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்டு வந்த காலதாமதம், வெகுவாக குறையும்
* ஒரு பொருளுக்கு பல்வேறு நிலைகளில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு, விற்பனைக்கு வரும் இடத்தில் மட்டுமே, வரி விதிக்கப்படுவதால், பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்
* மேலும், வரி விதிப்பின் கீழ் பல்வேறு பொருட் களும் வருவதாலும், வரி வசூலிக்கும் உரிமை கட்டுப்படுத்தப்படுவதாலும், வரி வசூல் அதிகரிக் கும். வரி ஏய்ப்பு செய்து வந்தவர்களும், இனி வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
சாத்தியமா?
மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை, ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு திட்ட மிட்டிருந்தது. இதற்கான சட்டங்கள் மற்றும் வழி முறைகளைவகுக்க அமைக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., கவுன் சில் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை. அதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை யிலான இந்த கவுன்சிலில், மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளிட்டவற்றில், ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ள போதிலும், ஜி.எஸ்.டி., சட்டங்களில் இதுவரை கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அடுத்த கூட்டம், வரும்,4-5 தேதிகளில் மீண்டும் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், அனைத்து பிரச்னைகளுக் கும் தீர்வு காணப்பட வேண்டும்.
அதன்பின், 9ல் துவங்கும், பார்லிமென்ட் பட் ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தின் போது, இந்த சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஏப்ரல் மாதத்தில், கவுன்சிலின் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டு, சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
அதிகாரிகளுக்கு பயிற்சி, தொழில் நிறுவனங் கள் புதிய முறைக்கு, மாறுவதற்கு அவகாசம் உள்ளிட்டவை அளிக்கப்பட வேண்டும். மொத் தத்தில் காலஅவகாசம் குறைவாக இருந்தா லும், ஜூலை,1 முதல் புதிய வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்கு, அதிக சாத்தி யம் உள்ளது. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப் படும் முடிவு, மசோதா நிறைவேற்றம் ஆகிய வற்றின் அடிப்படையிலேயே, இதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments