அம்மாநில பா.ஜ., தலைவர் கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது உ.பி.,யை சேர்ந்த ஆதித்யாநாத்தை முதல்வராக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. மவுரியா, மற்றும் தினேஷ்சர்மா ஆகிய இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.
அனல் பறக்கும் பேச்சு:
யோகி ஆதித்யாநாத் உ .பி., மாநிலம் கோரக்பூர் பகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். கோர்காநாத் மடத்தின் சாமியாராக இருந்து வரும் இவர் சிறந்த பார்லிமென்டேரியன் என பெயர் பெற்றவர். இவரது பேச்சு அனல் பறக்கும் விதமாக இருக்கும்.
நாளை(மார்ச்-19ல்) பதவியேற்பு
உ.பி., முதல்வராக தேர்வான யோகி ஆதித்யநாத், நாளை(மார்ச்-19ல்) பதவி ஏற்கிறார்.
Comments