"மேட்" பேரவையிலிருந்து தீபா கணவர் "மேடி" திடீர் விலகல்.. தனிக்கட்சி தொடங்கப் போறாராம்!

  Jayalalithaa's niece Deepa's husband to launch partyOneIndia News : சென்னை: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் திடீரென விலகியுள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அண்மையில் தொடங்கினார்.

பேரவை தொடங்கியது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் தீபா கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சியை அறிவிக்கும் முன்பாக தீபா கணவர் மாதவன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து விலகிவிட்டதாகவும் மாதவன் அறிவித்துள்ளார். மேலும் தீபா பேரவை நடத்துவதாகவும், தாம் கட்சி நடத்த உள்ளதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார்.

மாதவனின் திடீர் விலகலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. கட்சி தொடங்கிய ஒரு மாதத்திற்குள் ஒரே குடும்பத்திற்குள் இன்னொரு கட்சியா?

கட்சியின் பெயரை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிப்பேன் என்ற அவர், தீபாவுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்றார்.

தொண்டர்களாம் அப்படியானால் ஏன் திடீரென கட்சி தொடங்குகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, தொண்டர்கள் கோரிக்கையை ஏற்றுதான் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்றார்.

தனித்து இயங்க போகிறோம் தீபா, பேரவை நடத்துகிறார், நான் கட்சி நடத்துகிறேன். இரண்டும் வேறு. நான் தனித்து இயங்கப்போகிறேன். பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் நிறைய இருக்கிறது. எனவே பேரவையில் தீபாவால் தனித்து இயங்க முடியவில்லை. எனவே நான் தனித்து செயல்பட முன் வந்துள்ளேன்.

குழப்ப சிகாமணி ஆர்.கே.நகரில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு மக்களின் விருப்பத்தை கேட்டு செயல்படுவேன் என்றார். நிருபர்களின் கேள்விகள் பலவற்றுக்கும் தீபாவைவிட மோசமாக குழப்பியடித்து பதில் கூறியிருந்தார் மாதவன்.

முடியலப்பா சாமி தீபாவுடன் முரண்பாடு கிடையாது என கூறிக்கொள்ளும் மாதவன், அவர் பேரவை நடத்துகிறார், நான் கட்சி நடத்துகிறேன் என்றும், ஒரே வீட்டில்தான் இருப்போம் என்றும் கூறினார். அடங்கப்பா, தலைய பிச்சிக்கலாம் போல இருக்கு சாமி.

Comments