OneIndia News : சென்னை: கன்னட இளம் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக பாவனா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று கொச்சியில் பாவனா - நவீன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.
நவீன் - பாவனா இருவரும் கடந்த 2014ம் ஆண்டிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக பாவனா படங்களில் நடித்து வந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப் போனது.
இந்த நிலையில், பாவனா-நவீன் திருமண நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கொச்சியில் எளிமையாக நடந்ததாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மஞ்சு வாரியர் பங்கேற்றார்.
இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளானார். இந்த சம்பவத்தில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்துள்ள பாவனாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
Comments