சிறையில் "சுயசரிதை" எழுதும் சசிகலா... அங்கேயும் தொடரும் தியானம்!

அடுத்து லேப்டாப்சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சுயசரிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அத்துடன் சிறைக்கு உள்ளேயும் தியானத்தை தொடர்ந்து மேற்கொள்கிறாராம் சசிகலா.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அரசியலில் குதித்தார். ஜெயலலிதாவைப் போல நடை உடை சிகை அலங்காரம் செய்து கொண்டார். ஆனால் இதை தமிழக மக்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா அதிமுக பொதுச்செயலராகி முதல்வர் நாற்காலியில் அமரவும் முயற்சித்தார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிறை தண்டனையை உறுதி செய்ததால் முதல்வர் பதவி கனவு தவிடுபொடியானது.

ஜெ. கல்லறை சபதம் சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு சசிகலா போன நாளில் அவர் அரங்கேற்றிய நாடகங்கள் ஏராளம்.. ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மூன்று முறை ஓங்கி அடித்து கர்ண கொடூரமாக சபதமெல்லாம் எடுத்தார்.

எம்ஜிஆர் இல்லத்தில் தியானம் அப்படியே திடீரென எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டார். பெங்களூரு சிறைவாசலில் கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அங்கேயும் தியானம் சிறைக்குள் போன சசிகலா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறாராம். அப்படியே ஒரு வாக்கிங் போய் அங்கேயும் தியானத்தை தொடர்கிறாராம்.

சுயசரிதை அதன் பின்னர் ஜெயில் மேட் இளவரசியுடன் அமர்ந்து பழைய சம்பவங்கள், நிகழ்வுகளை பேப்பரில் எழுதுகிறாராம். இவை எல்லாவற்றையும் தொகுத்து சுயசரிதை ஒன்றை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா.

அடுத்து லேப்டாப் நாட்டை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பீட்டர் முகர்ஜி சிறையில் தம்முடைய சுயசரிதை எழுத லேப்டாப் வேண்டும் என கேட்டிருந்தார். அதேபோல் தாமும் கேட்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம் சசிகலா.

Comments