ஜெ., மறைவையொட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என அதிமுக ஓ.பி.எஸ்., அணி அறிவித்தது. இது தொடர்பாக சென்னையில், வேட்பாளரை தேர்வு செய்ய ஆட்சி மன்ற குழுக்கூட்டம் நடந்தது.
ஓ.பி.எஸ்., மாபா, செம்மலை, முனுசாமி, உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மதுசூதனன் போட்டியிட வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதனை ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் தெரிவித்தார்.
Comments