‛ஊத்திக்கொண்டது' உ.பி., ; அகிலேஷ் சோகம்

தினமலர் செய்தி : லக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதி தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவராக இருந்த முலாயம் அறிவித்திருந்தார். ஆனால், பின்னர் கட்சியை கைப்பற்றிய அவரது மகன் அகிலேஷ் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்து வந்தார். இதற்காக ராகுலும், அகிலேசும் சேர்ந்து பல இடங்களில் பேரணியில் கலந்து கொண்டனர். தேர்தல் கருத்து கணிப்பு பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்த போதும், இதனை ஏற்க இருவரும் மறுத்தனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் அவர்களது நம்பிக்கை தகர்ந்தது. ஆரம்பம் முதலே பா.ஜ., முன்னிலை பெற்றது. சமாஜ்வாதி கூட்டணி 100 இடங்களை கூட தாண்டாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அகிலேஷ் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Comments