ஓ.பி.எஸ். உண்ணாவிரதத்திற்கு அமோக ஆதரவு

தினமலர் செய்தி : இன்றைய(மார்ச் 8) உண்ணாவிரதத்தின் மூலமாக, அ.தி.மு.க.,விலும், பொதுமக்களிடத்திலும், பன்னீர் அணியினருக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

அதேநேரத்தில், கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க, சசிகலா தரப்பினர், எல்லா வகையிலும் சதி வேலைகள் செய்தனர். ஆனால், இது பலிக்கவில்லை. உண்ணா விரதத்தை தொடர்ந்து, லோக்சபாவில், ஜெ., மரண சர்ச்சையை கிளப்ப, பன்னீர் ஆதரவு, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிஉள்ளார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர் கள் மற்றும் பொதுமக்களிடம், ஆதரவு கிடைத் துள்ளது. சசிகலா குடும்ப ஆதிக்கத்தை விரும் பாத, அ.தி.மு.க., நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுத்துள்ளனர்.

இந்நிலையில், ஜெ., மரணம் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இவற்றுக்கு தீர்வு காண, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் அல்லது நீதி விசாரணை வேண்டும் என, பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

33 இடங்கள்

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று(மார்ச் 8) மாநிலம் முழுவதும், 33 இடங்களிலும், புதுச்சேரியில், இரண்டு இடங்களிலும், காலை, 9:00 மணி முதல்,மாலை, 5:00 மணி வரை, உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். அனைத்து இடங்களிலும், உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை, அதிக அளவில் பங்கேற்றனர். இதற்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். அனைத்து பகுதிகளிலும், உண்ணாவிரதம் நடைபெறும் இடம், பேச்சாளர்கள் விபரம் போன்றவற்றை அச்சிட்டு, சுவரொட்டிகள் ஒட்டிஉள்ளனர். வீடு தோறும் துண்டுப் பிரசுரங் கள் வினியோகித்தனர். இளைஞர்களை கவர, சமூக வலைதளங்களிலும், தீவிரமாக பிரசாரம் செய்தனர்..

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கோபம் கொண்டுள்ள, கட்சி தொண்டர்களும், பொதுமக்களும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இது, சசிகலா தரப்பினரிடம், பீதியை ஏற்படுத்தி உள்ளது.

உண்ணாவிரதத்தில்கட்சியினர் பங்கேற்பதை தடுக்கும்படி, தங்கள் ஆதரவு மாவட்ட செயலர்களுக்கு உத்தர விட்டனர். அவர்களும், நிர்வாகி களை அழைத்து பேசினர். மேலும், கட்சியினர் மற்றும் பொதுமக்கள், உண்ணா விரதத்திற்கு செல் வதை தடுக்க, மகளிர் அணி சார்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கவியரங்கம், பட்டிமன்றம் நடத்தவும் உத்தரவிட்டனர். உண்ணாவிரதத்தை முறியடிப்ப தற்காக, முதல்வர் பழனிசாமி, மதுரை மற்றும் நெல்லையில் இன்று, அரசு கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.. 

உத்தரவு

ஆங்காங்கே விழாக்களில் பங்கேற்கும்படி, அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர். கட்சி தலைமை அலுவலகத்திலும், மகளிர் தின விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். இவற்றை முறியடித்து, உண்ணாவிரதத்தில் லட்சக்கணக் கானோரை பங்கேற்க வைக்க, பலத்தை காட்ட, பன்னீர் அணியினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்து, நாளை லோக்சபாவிலும், ஜெ., மரண சர்ச்சையை எழுப்ப, பன்னீர் ஆதரவு எம்.பி.,க் கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு, ஆதரவு தெரிவிப்பதா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதா என, சசிகலா ஆதரவு எம்.பி.,க்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Comments