‛சுசி லீக்ஸ்' - டுவிட்டரில் அடுத்தடுத்து குண்டு போடும் சுசித்ரா

தினமலர் செய்தி : சென்னை : சமூக வலைத்தளங்களில் இத்தனை நாட்களாக ரசிகர்களுக்குள்தான் அடித்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது பிரபலங்களே தங்களுக்குள் அடித்துக் கொள்ளாத குறையாக, தனிப்பட்ட, அருவெறுக்கத்தக்க பல விஷயங்களை டுவிட்டரில் அரங்கேற்றி வருகிறார்கள்.

சுசித்ரா போட்ட குண்டு

பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா பத்து நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷைப் பற்றிய சில விமர்சனங்களை அவருடைய டுவிட்டரில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவிட்டார். சில மணி நேரங்களிலேயே தன்னுடைய டுவிட்டரை யாரோ 'ஹேக்' செய்துவிட்டார்கள் என்றார். தொடர்ந்து மேலும் சிலவற்றைப் பதிவிட்டார். அடுத்து அவருடைய கணவர் நடிகர் கார்த்திக்குமார், தன் மனைவி சுசித்ராவின் டுவிட்டரை யாரோ 'ஹேக்' செய்துவிட்டார்கள் என்றார்.

பிரபலங்களின் லீலைகள்

இப்போது, மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்னத்திரை திவ்யதர்ஷினி, ஹன்சிகா போன்றவர்களின் கசமுசா புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மீண்டும் தன்னுடைய டுவிட்டர் கணக்கை யாரோ 'ஹேக்' செய்துவிட்டார்கள் என்றார். நேற்று இரவு இன்னும் சில ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களும் 'ஹேக்' செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சுசித்ராவின் டுவிட்டரில் இருந்து வெளியாகின.

சந்தேகம்

ஆனால் மற்றொரு பாடகியான சின்மயி, டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதில், “நேர்மையா சொல்லணும்னா, நாம எல்லாருமே கடுமையான மன அழுத்தத்தை கடந்து வந்திருப்போம். நம்ம வீட்டுல இருக்கிறவங்களுக்கும் அப்படி நடந்திருக்கலாம். ஆனால், அதைப் பத்தி நாம பேச மாட்டோம். அவ்வளவுதான்.. அவங்க (சுசித்ரா) அக்கவுண்ட்டுல இப்ப என்ன நடந்துகிட்டிருக்கோ, அத்தனையும் தவறு, ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே அவங்க என்னை பிளாக் பண்ணிட்டாங்க அதுக்கான காரணம் என்னன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்..” என பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்து காத்திருக்கும் குண்டு

சுசித்ராவின் டுவிட்டரில் சில மணி நேரங்களுக்கு முன் சில ஆபாச வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களில் மேலும் சில முக்கிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. தனுஷூம், அனிருத்தும், தனக்கு மயக்க மருந்து கொடுத்து உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். மார்ச் 6ம் தேதி தனுஷ்-அமலாபாலின் லீலைகள் அம்பலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் தடுக்க முயற்சி

ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படும் சுசித்ராவின் பெயரில் வெளியிடப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் இரவிலேயே வெளியிடப்படுகிறது. இதை சைபர் கிரைம் போலீசார் தடுக்க முயற்சித்தாலும், அதற்குள் டுவிட்டர் பாலோயர்கள் இதை டவுன்லோடு செய்து அதிகமாக பரப்பிவிடுகின்றனர். இதனால் ஏராளமானபேர் டிவிட்டரில் குவியத்தொடங்கியுள்ளனர்.

டிரெண்ட்டிங்கில் சுசித்ரா

சுசித்ரா பெயரில் வெளியிடப்படும் அடுத்தடுத்த லீலைகளால் டுவிட்டரில் தற்போது அவரது பெயர் தான் டிரெண்ட்டில் உள்ளது.

சுசித்ராவிற்கு மனரீதியாக பிரச்னை.?

சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக், ‛சுசித்ராவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படவில்லை, மனரீதியாக அவர் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக' கூறியிருக்கிறார். மேலும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Comments