சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம் : தேர்தல் கமிஷன் அதிரடி

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பணியிடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய கமிஷனர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி மற்றும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை மாற்றக் கோரி திமுக சார்பில் தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்ட நிலையில், தற்போது கமிஷனர் ஜார்ஜூம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments