'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கி உள்ளார். இதன் தலை வர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியரான ராஜா - சரண்யா ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு, பேரவை ஆதரவாளர் கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், சென்னையில், நேற்று முன் தினம் இரவு, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை, கனகதாரா தெருவில் உள்ள, சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில், தீபா தலைமையில் ரகசிய கூட்டம் நடந்தது.
முன்னாள் - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகள் சிலர் பங்கேற்றனர். கூட்டத் தில், ஒரு மண்டலத்திற்கு, 8 மாவட்டங் கள் என, தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங் களை, நான்கு மண்டலமாக பிரித்தனர். பின், நான்கு மண்டலங் களுக்கும், 32 பொறுப்பாளர்களை நியமித்தனர்.
இதுகுறித்த தகவல் எதுவும், தீபாவின் கணவர் மாதவனுக்கு தெரியவில்லை. அதனால், கணவன் - மனைவி இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. தீபா பேரவை துவக்க, துாண்டுகோலாக இருந்தவர்களில் பலருக்கு, பொறுப்பு எதுவும் வழங் கப்படவில்லை. அவர்கள் அதிருப்தி அடைந்துள்ள னர். பதவிக்காக, குடுமிப்பிடி சண்டை துவங்கி உள்ளது.
தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது:
கடந்த, 85 நாட்களாக, நான் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்து பேசி வருகிறேன். துவக்கத்தில் இருந்து, உண்மையாக உழைத்தவர் களுக்கு, பொறுப்புகள் வழங்க வேண்டும் என்பது, என்விருப்பம். ஆனால், சில விஷமிகள் உள்ளே புகுந்து, பணம் பார்க்கும் நோக்கில் உள்ளனர்.
இந்நிலையில், பேரவை சார்பில், 32 பொறுப் பாளர் கள், நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப் பட்டனர். இந்த அறிவிப்பில், எனக்கு உடன் பாடில்லை. உண்மையாக உழைத்தவர் களுக்கு, பொறுப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது, பொறுப்பாளர் களாக அறிவிக்கப் பட்டவர்களை, நான் ஒரு நாள் கூட சந்தித்த தில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து, பேரவை ஆதரவாளர்கள் கூறிய தாவது: தீபா, சில நபர்களின் பிடியில் சிக்கி யுள்ளார். ஜெயலலிதாவை போல், தீபாவை சுற்றியும் ஒரு கும்பல் உள்ளது.
உண்மையான தொண்டர் களை விடுத்து, பணம் கொடுத்த வர்களுக்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. நாங்கள், பேரவையில் இருக்கி றோமா அல்லது மனநல மருத்துவமனையில் இருக்கிறோமா என, தெரியாத நிலை நீடிக் கிறது.இவ்வாறு கூறினர்.
Comments