ஸ்டாலின் நினைத்தால் அதிமுக ஆட்சி தொடர முடியாது: திமுக எச்சரிக்கை

தினமலர் செய்தி : சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை: ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை வெளியிடுவதை தினகரன் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வம் அணியினரின் கேள்விக்கு தினகரன் முதலில் பதில் சொல்ல வேண்டும். 

இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என பொது மக்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தில் இருந்தும் கூட அரசியல் நாகரீகம் கருதி ஸ்டாலின் அமைதி காக்கிறார். 

அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஸ்டாலின் தீர்மானித்து விட்டால், ஒரு நிமிடம் கூட அதிமுக ஆட்சி தொடர முடியாது என்பதை தினகரன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments