எம்எல்ஏ.,வுக்கு எதிர்ப்பு :
சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ.,வாக இருப்பவர் மாணிக்கம். இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் இன்று அலங்காநல்லூர் ஒன்றிய யூனியன் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த தகவல் அறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர், எம்எல்ஏ., மாணிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டுவதற்காக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
எம்எல்ஏ., வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த அலங்காநல்லூர் ஒன்றிய யூனியன் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஆண்கள், 50 க்கும் மேற்பட்ட பெண்கள் என நூற்றுக் கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
Comments