ஜெ. மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்- பி எச் பாண்டியன்

மூச்சை நிறுத்தச் சொன்னது யார்?OneIndia News : சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை நாங்களே நெருங்கி விட்டோம் என்று முன்னாள் சபாநாயகர் பிஹெச் பாண்டியன் கூறியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிஹெச் பாண்டியன், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறினார்.

கருவிகளை அகற்றியது ஏன்?

பி ஹெச் பாண்டியன் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது இறுதி நாளில் அதாவது அவரது உடலில் இருந்த மருத்துவ உபகரணங்களை அகற்றினார்கள்.

மூச்சை நிறுத்தச் சொன்னது யார்?

இந்த உபகரணங்களை அகற்றி ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தச் சொன்னது யார் என்றும் அதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார் என்றும் பிஹெச் பாண்டியன் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தச் சொன்னது யார் என்றும் பிஹெச் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

சிபிஐ விசாரணை

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தையும், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து அளித்த சிகிச்சைகளைப் பற்றியும் இதுவரை எந்த அறிக்கையுமே வெளியிடவில்லை. எனவேதான் நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்றும் பிஹெச் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெருங்கிவிட்டோம்

ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை நாங்களே நெருங்கிவிட்டோம் என்றும் பி.ஹெச் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணமடைந்து 90 நாட்களை எட்ட உள்ள நிலையில் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் பி ஹெச் பாண்டியன்.

Comments