கருணாநிதி ஆரோக்கியமாக உள்ளார்.. ஸ்டாலினுக்கு ஆசி வழங்கிய போட்டோ வெளியானது

DMK chief Karunanidhi is recovering: Photo released
OneIndia News : சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு ஆதாரமாக, கட்சி செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய படம், கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதலே ஒவ்வாமை, சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார் கருணாநிதி.
இதையடுத்து கோபாலபுரம் வீட்டிலேயே கருணாநிதி தீவிர ஓய்வு பெற்று வருகிறார். அவருக்கு பேச்சு தெரபி உள்ளிட்ட பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களில் கருணாநிதி பங்கேற்கவில்லை. இது தொண்டர்களை சோர்வுக்குள்ளாக்கியது. கருணாநிதிக்கு என்ன ஆனது என்று சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் டிவிட்டரில் கேள்வி எழுப்பினார். ஆனால், கருணாநிதி நலமோடுதான் உள்ளார் என்பதற்கு ஆதாரமாக இந்த புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தங்களது தலைவர் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டுள்ளதாக கூறி கமெண்ட் போட்டு வருகிறார்கள் திமுக நெட்டிசன்கள்.

Comments