'ஏசி' காரில் பவனி வந்து தீபா பிரசாரம்! இறங்கி வந்து ஓட்டு கேட்க மக்கள் வலியுறுத்தல்

சென்னை:'ஏசி' காரின் முன் இருக்கையில் அமர்ந்து, பிரசாரம் செய்த தீபாவை, இறங்கி வந்து ஓட்டு கேட்கும்படி, பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில், ஜெ., அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். அமர்ந்தபடி ஓட்டு கேட்டார்நேற்று, தண்டையார்பேட்டை, வைத் தியநாதன் மேம்பாலம் சந்திப்பு, காமராஜர் நகர், நேரு நகர், நாவலர் நகர் பகுதிகளில், ஓட்டு சேகரித்தார்.

வைத்தியநாதன் மேம்பால சந்திப்பில், காலை, 9:00 மணிக்கு, பிரசாரத்தை துவக்கிய தீபா, காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி ஓட்டு கேட் டார். ஜெயலலிதா, பிரசார வேனின் முன் இருக்கை யில் அமர்ந்து, ஓட்டு கேட்பது வழக்கம். அதே பாணியை,தீபா பின்பற்றினார். ஆனால், அவருக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.காரில் இருந்து இறங்கி வந்து, ஓட்டு கேட்கும்படி கோஷமிட்டனர்.

அதைத் தொடர்ந்து, காரில் இருந்து இறங்கி, பிரசார வாகனத்தில் ஏறி, ஓட்டு சேகரித்தார். அதுவும் சரியாக எடுபடாததால், நேரு நகர், நாவலர் நகர் உள்ளிட்ட பகுதி களில், நடந்து சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

நான் சேவை செய்யவே அரசியலுக்குவந்தேன். எனக்கு வெற்றி, தோல்வி குறித்து கவலை இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களின் அடிப்படை பிரச்னை களுக்கு தீர்வு காண்பேன். 

நாகரிகமல்ல

அரசியல் தெரியாத குழந்தை என, என்னை மதுசூதனன் கூறியுள்ளார். மூத்த அரசியல்வாதி, இதுபோன்று பேசுவது நாகரிகமல்ல. படித்தவர்கள், பெண்கள், இளைஞர்கள், அரசியலுக்கு வர வேண்டும் என, அனைவரும் விரும்புகின்றனர். 

தவறான எண்ணம்

தெருவில் நடந்து வந்தால், ஏதாவது செய்து விடுவர் என, தவறான எண்ணத்தை துாண்டி விட்டவர் மதுசூதனன். பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு, அதற்கேற்ப என் பிரசார வியூகத்தை அமைப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Comments