வதந்திக்கு பின்னால் சசிகுடும்பம்: தீபா

சென்னை: வதந்திகளுக்கு பின்னால் சசிகலா குடும்பம் இருக்கிறது என தீபா கூறினார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர் நான் போட்டியிடுவதால் தேவையில்லாத வதந்திகளை பரப்புகின்றனர். என் கணவர் கட்சி துவங்க இருப்பதாக கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதை நான் எதிர்பார்க்க வில்லை. வதந்திகளுக்கு பின்னால் சசிகலா குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனது கணவர் மாதவனை பின்னால் இருந்து சிலர் இயக்குகின்றனர். பேரவையில் அதிமுக தொண்டர்கள் இணைந்து விடுவார்கள் என அச்சப்படுகின்றனர். பேரவையை கலைத்து விட்டதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என கூறினார்.

Comments