127 பேர் வேட்புமனு தாக்கல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மார்ச் 16 முதல் 23 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 127 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் தொடங்கியது. இதில் முறையாக தாக்கல் செய்யப்படாத, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாளாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற முடியும். வேட்பாளர்கள் எண்ணிக்கை, 32 ஆக இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு மிஷின் பயன்படுத்தப்படும்.
ஓட்டுச்சீட்டு முறை வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மிஷின்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். அதிகபட்சம் 4 மிஷின்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். 63 வேட்பாளர்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால், மிஷின்களுக்கு பதில், பழைய முறையான ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்.
முக்கிய வேட்பாளர்கள் ஆர்.கே. நகரில் சசி அணியின் டிடிவி தினகரன், ஒபிஎஸ் அணியின் மதுசூதனன், பாஜகவின் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தேமுதிகவின் மதிவாணன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.
ஏப்ரல் 12ல் வாக்குப்பதிவு ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
டிடிவி தினகரன் மனுவிற்கு எதிர்ப்பு சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்புமனை ஏற்கக் கூடாது என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். தினகரன் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்புமனுக்கள் ஏற்பு திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மாலையில் எத்தனை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, எத்தனை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது பற்றிய பட்டியல் வெளியாகும். 27 ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும். 28ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
Comments