அதிகாரிகள் கறார் அவர் தம்முடைய வாதத்தின் தொடக்கத்தில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பது பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளோ அது தொடர்பாக இருதரப்பும் பதில் அளித்துள்ளனர்; அதை நாங்கள் பரிசீலிக்கிறோம். இப்போது இரட்டை இலை தொடர்பாக மட்டும் வாதங்களை முன்வையுங்கள் என கறாராக கூறினர்.
குற்றவாளி சசிகலா ஆனாலும் அசராத ஓபிஎஸ் அணி வழக்கறிஞர் வைத்தியாநதன் அடுத்து வைத்த வாதத்தால் தேர்தல் ஆணையம் ஜெர்க்காகிப் போனது. அதாவது உச்சநீதிமன்றத்தால் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளி வேட்பாளரை பரிந்துரைப்பதா? தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா, தேர்தலில் போட்டியிட முடியாது; வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறாது. இப்படிப்பட்ட ஒரு குற்றவாளி ஒரு வேட்பாளரை பரிந்துரைப்பதும் அந்த வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்குவதும் அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது என்பதும் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தையே கேள்விக்குறியாக்கக் கூடியது என வாதங்களை முன்வைத்தார்.
மவுனமான தேர்தல் ஆணையம் இந்த வாதத்துக்கு பதிலளிக்க முடியாமல் தேர்தல் ஆணையம் மவுனமாக இருந்தது. இந்த வாதத்தையே அதிமுக பெயர், கொடி, சின்னம் முடக்கம் தொடர்பான அறிக்கையிலும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டால் சசிகலா, அதிமுக பொதுச்செயலராகவே தொடர முடியாது என்பது மட்டும் உறுதி என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
Comments