தினமலர் செய்தி : சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தீபா தெரிவித்தார். எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவை தலைவர் தீபா சென்னையில் இன்று அளித்த பேட்டி: ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன். மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன். யாரிடமும் நான் இதுவரை ஆதரவு கேட்கவில்லை.
தி.மு.க., சசிகலா குடும்பத்தினர் தவிர யார் ஆதரவு அளித்தாலும் ஏற்பேன். சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பர். அரசியல் ஆதாயத்திற்காக ஜெயலலிதா மரணம் குறித்து பேசவில்லை. பன்னீர்செல்வத்தை சந்தித்தது மரியாதை நிமித்தமாக தான். இவ்வாறு அவர் கூறினார்.
Comments