மாரடைப்பு 75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கண்ணீர் கடலில் தமிழகம் நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மரணத்தில் மர்மம் இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஜெ.வின் தோழி கீதா ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.
திடீர் திருப்பம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
தான்தான் ஜெ.வின் மகன் அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.
ஜெ.வுக்கும் சசிக்கும் வாக்குவாதம் இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments