இடைத்தேர்தல்:
ஆர்.கே.நகர் தொகுதியில், 127 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு ஓட்டுப்பதிவு மிஷினில், 16 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற முடியும். ஓட்டுப்பதிவு மிஷினின், கடைசி பட்டன், 'நோட்டா'விற்கு ஒதுக்கப்படும். எனவே, 15 வேட்பாளர்கள் இருந்தால், ஒரு ஓட்டுப்பதிவு மிஷின் பயன்படுத்தப்படும். வேட்பாளர்கள் எண்ணிக்கை, 32 ஆக இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு மிஷின் பயன்படுத்தப்படும்.
அதிகரிப்பு:
வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஓட்டுப்பதிவு மிஷின்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தேர்தலில் அதிகபட்சம் 4 மிஷின்கள் மட்டுமே பயன்படுத்தலாம் எனபதால் 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால், ஓட்டுப்பதிவு மிஷின்களுக்கு பதில், பழைய முறைப்படி, ஓட்டுச் சீட்டுகளையே பயன்படுத்த முடியும்.
பரிசீலனை:
இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் இன்று (மார்ச், 24) நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் இந்த பரிசீலனையில் பங்கேற்பர். அப்போது, முறையாக தாக்கல் செய்யப்படாத, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்., 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments