தினமலர் செய்தி : பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவை, தமிழகத்தை சேர்ந்த நான்கு முக்கிய அமைச்சர்கள் சந்தித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை சந்திக்க, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர், நேற்று காலை, சென்னை யில் இருந்து பெங்களூரு வந்தனர். இதன்பின், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜுவும் பெங்களூரு வந்தார்.
நான்கு பேரும், பகல், 1:23க்கு சிறை வளாகத்துக்குள் சென்றனர். இனிப்பு, உலர்ந்த பழங்கள் அடங்கிய, தலா ஒரு பெட்டியை,'பேக்கிங்' செய்து, சசிகலா வுக்கு கொடுத்தனர். சசிகலாவை சந்தித்த பின், பகல், 2:36க்கு வெளியே வந்தனர். 'பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல் லாது' என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், அடுத்த கட்ட மாக என்ன செய்வது என்பது குறித்தும், தமிழக அரசியல் சூழ்நிலை குறித் தும் சசிகலா வுடன், அமைச்சர்கள் ஆலோசித் ததாக தெரிகிறது.
தமிழகத்தில் வறட்சியால், விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயி கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆனால், விவசாயிகளை சந்தித்து, யாரும் ஆறுதல் கூறவில்லை.
மேலும், 'பல முக்கிய அரசு பணிகள் முடங்கி உள்ள நிலையில், சிறையில் உள்ள குற்ற வாளியை, முக்கிய துறைகளை வகிக்கும் அமைச்சர்கள் சந்தித்தது ஏன்' என்ற கேள்வி, தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
Comments