தினமலர் செய்தி : கோல்கட்டா: மெக்டொனால்ட்டின் பிரெஞ்ச் பிரையில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோல்கட்டாவை சேர்ந்தவர் பிரியங்கா மொய்த்ரா. கர்ப்பிணியான இவர், கடந்த செவ்வாய் அன்று தனது குழந்தைகளுடன் மெக்டொனால்ட் ரெஸ்டாரென்டிற்கு சென்று பிரரெஞ்ச் பிரை வாங்கினார். வீட்டில் பார்சலை திறந்தபோதுஉள்ளே வறுத்த பல்லி இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், ரெஸ்டாரென்டில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் இதனை ஏற்காமல், இலவச உணவு மற்றும் பிறந்த நாள் பரிசு வழங்குவதாக சமரசம் செய்ய முயற்சி செய்தனர். இதனையடுத்து அவர் பல்லி இருந்ததை புகைப்படம் எடுத்து போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவர் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்டார்.
இது தொடர்பாக மெக்டொனால்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருகிறோம். உண்மை நிலையை அறிய விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments