இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் 13ம் தேதி போராட்ட முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கட்டும். ரேசன் கடைகளில் நிலவும் அநியாயங்களை அகற்றிட போராடுவோம். இந்த ஆட்சி அகன்றால்தான் அநியாயம் அகற்றப்படும் என்றால் அதையும் அகற்ற போராடுவோம். ரேசன் கடைகள் செயல்பாடுகளை அதிமுக அரசு சீர்குலைத்து விட்டது.
வறுமையில் வாடும் மக்களை பட்டினியில் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் இருப்பதாக அமைச்சர்கள் கூறுவது உண்மைக்கு மாறானது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments