பரபரப்பான சூழலில் நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்

தினமலர் செய்தி : சென்னை : தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (மார்ச் 16) துவங்குகிறது. தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
முதல் பட்ஜெட் :

காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடியதும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற உள்ளது. நிதியமைச்சராக ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் :

நாளைக்கு கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வரவேண்டும் என்று சட்டசபை செயலகத்தில் தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சபாநாயகர் தனபால், தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments