மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலர் தனராஜ், சேலம் மாவட்ட தலைவர் சென்னகேசவன் ஆகியோர், நேற்று கூறியதாவது:
அமைச்சர் மறுப்பு
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன், நேற்று பேச்சு நடத்தினோம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த் தப்பட்டுள்ள கட்டணங்களை குறைக்க வும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவ தில் இருந்து விதிவிலக்கு அளித்தல், பெட்ரோல், டீசல் மீதான, 'வாட்' வரியை குறைக்க வும் கோரிக்கை விடுத் தோம். அவற்றை ஏற்க, அமைச்சர் மறுத்துவிட்டார்.
வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில், விதி விலக்கு அளித்து, உடனடியாக உத்தரவு பிறப்பிக் கும்படி கேட்டோம். ஆனால், எந்த ஒரு முடிவையும் தெரிவிக்க, அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்து விட்டார். இதனால், தமிழகத்தில் லாரிகள் ஸ்டிரைக் தொடர்கிறது.
தமிழகத்தில், 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. நேற்று காலை, ஸ்டிரைக் துவங்கிய நிலையில், 3.40 லட்சம் லாரிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளன. சரக்குகளுடன் வந்த லாரிகள், வெளியில் இருந்து, தங்கள் சொந்த ஊருக்கு வந்த லாரிகள் மட்டும் இயங்கின.
இன்று முதல்,அந்த லாரிகள் இயக்கமும் முடங்கும். அதே நேரம், மக்களின் இன்றியமையாத தேவைக ளான மருந்து, பால், காஸ் பரிமாற்றத்தில் ஈடுபடும் லாரிகள், தடையின்றி இயங்கும்.
வெளி மாநிலங்களுக்கு, தமிழகத்தில் இருந்து இயக்கப் படும்,50 ஆயிரம் லாரிகள், 27ம் தேதிமுதல் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், வட மாநிலங் களுக் கான, 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு கள், மூன்று நாட்களாக தேக்கம் அடைந்து உள்ளன.
நேற்று, தமிழகத்திற்குள் லாரிகள் இயக்கப் படாததால், 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்து உள்ளன. ஸ்டிரைக் கால், 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.லாரி உரிமையாளர்களுக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு, மத்திய, மாநில அரசுகளுக்கு, 10 கோடி ரூபாய்க்கு வரி வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தென் மாநிலங்கள்
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரள மாநில லாரி உரிமையாளர் சங்கங்கள், இன்று, தமிழக ஸ்டிரைக்குக்கு ஆதரவாக களம் இறங்குகின்றன. இதனால், தமிழகம் மட்டு மின்றி, தென் மாநிலங்களில், 30 லட்சம் லாரி களின் இயக்கம், இன்று முதல் தடைபடும் என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Comments