தினமலர் செய்தி : ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்திரிகையாளர்களிடம் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மக்கள், விவசாயிகள் வேண்டாம் என சொன்னால், அதனை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த திட்டம் கடந்த 2006ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கவில்லை. இந்த திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்துள்ளேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது. இந்த திட்டத்திற்காக மோடி அரசை யாரும் குறைகூறக்கூடாது.வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தனித்து நிற்க வேண்டும். பா.ஜ., இதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments