டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்

புதுடில்லி: பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனுடன் விவசாயி பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments