திமுக வேட்பாளருக்கு அமோக ஆதரவு - ஆர்.கே.நகர் கள நிலவரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், திமுகவிற்கு வாழ்வா, சாவா தேர்தல் என்றால் அது மிகையாகாது. அதிமுக சிதறி கிடக்கும் இந்த வேளையில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும், அந்த வெற்றியின் வித்தியாசம் அதிகமாக இருக்க வேண்டும். அதை வைத்து தான் திமுகவின் மக்கள் செல்வாக்கு உறுதி செய்யப்படும்.

அதன் படி, அதிமுகவின் அனைத்து அணியும் பலமான வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. அதிமுக ஓ.பி.எஸ். அணியின் சார்பாக மதுசூதனனும், அதிமுக சசி அணியின் சார்பாக டி.டி.வி. தினகரனும், அதிமுக தீபா அணியில் அவரே களம் காணும் வேளையில் திமுக சார்பில் அந்த தொகுதி பகுதி செயலாளர் மருது கணேஷ் நிறுத்தப்பட்டு இருக்கார்.

வெறும் பகுதி செயலாளர் என்ற நிலையில் இவரின் தகுதியை அனைவரும் குறைத்து மதிப்பீடு செய்தது என்னமோ உண்மை தான். ஆனால், மருது கணேஷ் ஆர்.கே.நகரின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அறிந்தவராகவும், அனைவருக்கும் தெரிந்தவராகவும் இருக்கார். பலம் வாய்ந்த அனைத்து வேட்பாளர்களையும் விட களத்தின் நின்று பணியாற்றும் வல்லமை இவரின் கூடுதல் பலம்.

இந்த நிலவரம் கடந்த 1 வாரகாலமாக உங்கள் தமிழ் செய்தி 24X7 இணையத்தின் வாயிலாக நடத்தப்பட்ட களநிலவரம் உறுதியாகிறது. திமுக வேட்பாளரின் தகுதி குறித்து மக்களிடம் கேட்டதற்கு, அருமையான தேர்வு என்று 83.6% சதவிகிதம் மக்கள் வரவேற்று இருக்கார்கள். 13.7% மக்கள் தினகரனுக்கு இவரே போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். 2.7% மக்கள் இவரின் தேர்வு சரியா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும் என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

மொத்தத்தில், பர்கூர் தொகுதியில் ஜெ. எனும் யானையின் காதில் சுகவனம் எனும் சிறு எறும்பை விட்டு அலற செய்த திமுக, மீண்டும் ஒரு முறை தன எளிய தொண்டனை களம் இறக்கி அனைத்து ஜாம்பாவான் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் அதிர்ச்சி தர காத்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை.

Comments