ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் திட்டம்... எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாக தினகரன் பகீ்ர் குற்றச்சாட்டு

MK Stalin trying to buy our MLAs, says TTV Dinakaranசென்னை: அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எங்கள் கட்சி எம்எல்ஏ-க்களின் நண்பர்களிடம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருவதாக ஆர்.கே.நகர் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே.இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார் தினகரன். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்பேன். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து அதன் மூலம் வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆர்.கே நகரில் வாக்குக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடமே கேட்டு பாருங்கள் உண்மை புரியும். தமிழகத்தில் அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என சிலர் செயல்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருகிறார். ஆர்.கே.நகரிலேயே வீடு எடுத்து தங்கி, வாரத்தில் 5 நாள்கள் மக்களை சந்திப்பேன் என்றார் அவர்.

Comments