தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடலூர் கட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.கோவை வால்பாறையில் கனமழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. கடந்த 4 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
Comments