ஆர்.கே.நகரில் தினகரன் போட்டி : கட்சியை வளைக்க சசி அணி தீவிரம்

தினமலர் செய்தி : சென்னை : சென்னை ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினகரன் வேட்பாளர் :

அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி தினகரனை ஆர்கேநகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்தனர்.

போட்டியிட முடியுமா? :

இந்நிலையில், பெரா வழக்கில் கோர்ட்டால் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள தினகரன் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தன்னை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என தினகரன் கோர்ட்டில் கூறி உள்ள நிலையில், இவர் தேர்தலில் போட்டியிட முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் கட்சியை வளைக்க சசிகலா தரப்பினர் தீவிரம் காட்டி வருவதால், தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments