தினமலர் செய்தி : லக்னோ: உ.பி.,யில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற பா.ஜ., தற்போது, 295 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அங்கு தனிப்பெரும்பான்மை பலத்தடன் ஆட்சியமைக்கும் சூழ்நிலை உள்ளது. இதனையறிந்த அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பா.ஜ., அலுவலகங்கள் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
Comments