உ.பி. மற்றும் உத்தரகண்டில் பா.ஜ.க. ஆட்சி

தினமலர் செய்தி : லக்னோ: நடந்து முடிந்து 5 மாநில சட்டசபை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ., 320 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. உ.பி.,யில் ஆட்சி அமைக்க 202 போதுமானது. ஆனால் அனைவரும் ஆச்சரியம் படும் அளவிற்கு பா.ஜ., பெரும் வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது.

இங்கு ராகுல், அகிலேஷ் தலைமையிலான காங்., சமாஜ்வாடி கட்சிக்கு மக்கள் படு தோல்வியை கொடுத்துள்ளனர். இந்த கூட்டணிக்கு 60 க்குட்பட்ட இடங்களே கிடைக்கும் என தெரிகிறது. இது போல் மாயாவதி தலைமையிலான பகுஜ்சமாஜ்வாடி கட்சி வெறும் 20 க்கும் கீழான இடங்களையே பிடிக்கும் என தெரிகிறது. இது போல் காங்கிரஸ் ஆட்சி நிலவும் உத்தரகண்டில் மொத்தம் 70 தொகுதிகளில் 55 தொகுதிகளில் பா.ஜ.,முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. 

கோவாவில் நெருக்கடி:

பா.ஜ., ஆட்சி நிலவும் கோவாவில் மொத்தம் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் , பா.ஜ.,வும் மிக நெருக்கமான 16, 13 என முன்னிலை வகிக்கிறது. முதல்வர் பர்சேகர் தோல்வியடைந்தார். 

பஞ்சாபில் பா.ஜ., ஆட்சி இழக்கிறது:

பா.ஜ., அகாலிதளம் கூட்டணி ஆட்சிநிலவும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 75 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.,கூட்டணி 15 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி இந்த முறை பஞ்சாபில் வலுவாக கால் ஊன்றியுள்ளது. இந்த கட்சி வேட்பாளர்கள் 23 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், பா.ஜ.,14 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

குஷியில் கெஜ்ரி ;

டில்லியில் கட்சி துவங்கி சில நாட்களில் முதல்வர் பொறுப்பை பெற்ற கெஜ்ரிவால் தற்போது பஞ்சாப்பிலும் கால்பதித்துள்ளார். இங்கு பா.ஜ.,வை வீழ்த்தியது காங்கிரஸ் என்றாலும் 2 வது இடத்தை ஆம்ஆத்மி பிடித்திருக்கிறது என்பது இந்த கட்சிக்கு முன்னேற்றமாகவே கருதப்படுகிறது.இங்கு சட்டசபை தேர்தல் முடிவின்படி காங்கிரஸ்70க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 27 தொகுதிகளிலும், ஆளும் பா.ஜ., சிரோன்மணி அகாலிதள் கட்சி கூட்டணி வெறும் 15 இடங்கைளையே பிடித்து 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு ஆம்ஆத்மி எதிர்கட்சி அந்தஸ்தை பிடிக்கிறது. பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது எப்படி ? தேர்தல் முடிவு தொடர்பாக பா.ஜ., வின் தலைவர் அமித்ஷா டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்; 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது. வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உத்தரபிரதேசத்தில் சுதந்திரம் அடைந்தது முதல் இது போன்ற வெற்றி எந்த கட்சியும் பெற்றது இல்லை. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள். இது ஏழை மக்களின் கொள்கையை பின்பற்றியதால் வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக முழு அளவில் பிரசாரம் செய்தும் எடுபடாமல் போனது. இழுபறி நிலவும் மணிப்பூர், கோவாவில் பா.ஜ., ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments