என் சமாதிக்கு யார் வந்தாலும் நாசமா போவாங்க... ஜெ. கனவில் சொன்னதாக கிளப்பிவிடும் ஆர்கே நகர் வேட்பாளர்
ஜெ. கல்லறைக்கு போகலையே அத்துடன் நின்றாலும் பரவாயில்லை. சென்னையில் செய்தியாளர்களிடம் எம்ஜிஆர் நம்பி கூறியதாவது: நான் எம்ஜிஆர் நினைவிடத்தில் மட்டும்தான் அஞ்சலி செலுத்தினேன். ஜெயலலிதா கல்லறை பக்கம் போகவே இல்லையே.
கனவில் வந்த ஜெ... ஏனெனில் ஜெயலலிதா என்னுடைய கனவில் வந்து நான் இறந்த பிறகும் நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறார்கள். என் நினைவிடத்துக்கு யார் வந்தாலும் அவர்கள் நாசமாகத்தான் போவார்கள்.
இதெல்லாம் நடந்ததா? ஓபிஎஸ் வந்தார்... பதவி பறிபோனது... சசிகலா வந்தார் ஜெயிலுக்கு போனார்; தீபா வந்தார் கணவர் பிரிந்தார்... தினகரன் வந்தார் சின்னம் பறிபோனது.
என் ஆவி எம்ஜிஆரிடம்... இப்போதும் தலைவர் எம்ஜிஆரிடம் ஒரு குடும்பத்தின் தொந்தரவு தாங்கவில்லை.. என் ஆவியை அழைத்துக் கொள்ளுங்கள் என்றேன்... அவரும் என் ஆவியை அழைத்துக் கொண்டார்... எம்ஜிஆர் சமாதியில்தான் நானும் இப்போது இருக்கிறேன் என ஜெயலலிதா சொன்னார். அதனால் ஜெயலலிதா சமாதியில் மட்டுமே நான் அஞ்சலி செலுத்தினேன். இப்போது என் பயணத்தை தொடங்குகிறேன். இவ்வாறு எம்ஜிஆர் நம்பி கூறினார். இன்னும் எத்தனையோ!
Comments