சென்னை தாம்பரம் விமானப்படை விழா, அடையாறில் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதையொட்டி குடியரசத் தலைவரை வரவேற்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை வரும் பிரணாப் முகர்ஜியை, விமான நிலையத்தில் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கிறார். அதன் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி இன்று இரவு தங்குகிறார்.
நாளை ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் தாம்பரம் விமான படை தளத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அடையாறில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து பழைய விமான நிலையம் சென்று மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
Comments