சசி அணிக்கே இரட்டை இலை சின்னம் - வாய்ப்பு அதிகம்

Who will get Two leaves symbol? தற்பொழுதைய சூழலில் "இரட்டை இலை" சின்னம் யாருக்கு என்ற கேள்விக்கான விடை தான் ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

இதற்க்கான விடையை அளிக்க கூடிய விவாதம் தான் தற்பொழுது டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. ஓ.பி.எஸ். அணி மற்றும் சசி அணியின் சார்பாக வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்து கொண்டு இருக்கார்கள்.

சசி நியமனமே கேள்விக்குறி; அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல, சசி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சி விதிக்கு எதிரானது, தண்டனை பெற்ற குற்றவாளியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க கூடாது, சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது, சசியை அங்கீகரிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கினால் சசியை அங்கீகரிப்பதாகும், 95% அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் எங்களுக்கே ஆதரவு, அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் எங்களிடமே உள்ளனர், தாங்களே உண்மையான அதிமுக என ஓ.பி.எஸ். அணி வாதிட்டது.

65 உறுப்பினர்கள்தான் ஓபிஎஸ்-க்கு ஆதரவு, 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் சசிக்கு ஆதரவு, அதிமுகவில் பிளவே இல்லை, சசி அதிமுகப் பொதுசெயலராக சட்டப்படி தடை இல்லை, 122 எம்.எல்.ஏக்கள், 38 எம்.பிக்கள் இருப்பதால் சசி அணிக்கே இரட்டை இலை என்பது சசி அணியின் வாதம்.

ஆனால், ஓ.பி.எஸ். அணியினர் தாக்கல் செய்த தங்கள் ஆதரவு பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாகவும், சசி நியமனம் குறித்து முரண்பட்ட தகவல்களை மதுசூதனன் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் கூறியது ஏன் என்று மிக கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். நிர்வாகிகளின் கருத்து அடிப்படையில் பொதுச்செயலர் தேர்வு செய்யப்படலாம், விதிகளுக்கே உட்படே சசிநியமனம் என மதுசூதனன் கோர்ட்டில் தகவல். ஆனால், தற்பொழுது தேர்தல் ஆணையத்தில் அவரின் நியமனம் சட்ட விதிக்கு புறம்பானது என்று வாதிட்டு வருகிறார் மதுசூதனன். இது குறித்து விளக்கம் கேட்டு சரமாரியான கேள்விகளை தேர்தல் ஆணையம் தொடுத்து வருகிறது. 

அதிமுக அங்கீகாரம் உட்பட, இரட்டை இலை சின்னம் வரை ஓ.பி.எஸ். அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்ற சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த கிடுக்கு பிடி கேள்விக்கு பதில் இல்லாமால் ஓ.பி.எஸ். அணி முழிக்கிறது. எனவே, இரட்டை இலை தொடர்பான முடிவு சசி அணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருத படுகிறது.

Comments