சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி , ஆலோசனை நடத்தினார்..
இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி இன்று இரவு (மார்ச் 22)11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், , இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.
Comments