OneIndia News : ராமேஸ்வரம்: என் மகனுடைய சாவுக்கு அரசாங்கம் தரும் பணம் வேண்டாம். என் மகனுக்கு நேர்ந்தது போல் யாருக்கும் இனி நடக்காது என்ற அரசின் வாக்குறுதிதான் வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரிட்ஜோவின் அம்மா கண்னீர் மல்க கூறினார். ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிரிட்ஜோ என்ற இளம் வயது மீனவர் அநியாயமாக பலியானார். மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கமும், இனிமேல் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்ற உத்திரவாதம் கிடைக்காத வரை உயிரிழந்த பிரிட்ஜோ உடலை வாங்கமாட்டோம் என அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மகனை இழந்த துயரத்துடன் பேசிய பிரிட்ஜோவின் தாயார் பேசுகையில், ''என் மகனுக்கு நேர்ந்தது போல் இனி யாருக்கும் இது போல் நடக்கக் கூடாது என்ற உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். அரசு கொடுக்கும் பணத்தை விட, மீனவர்களைத் துன்புறுத்த மாட்டோம் என்கிற வாக்குறுதிதான் முக்கியம் என அவர் கூறினார்.
Comments