குடிபோதையில் தமன்னா, பூனமுடன் தனுஷ் பார்ட்டி: வீடியோ வெளியிட்ட சுசித்ரா

வீடியோ OneIndia News : சென்னை: பாடகி சுசித்ரா தனுஷ் பற்றிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனுஷுடன் நள்ளிரவு பார்ட்டியில் தான் காயம் அடைந்தது குறித்து ட்வீட்டிய பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இந்நிலையில் சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில் புதிய கணக்கு துவங்கியருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.

தனுஷ்

தனுஷ் ஒரு பார்ட்டியில் குடிபோதையில் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடுகிறார். அவர் அருகில் நடிகைகள் பூனம் பஜ்வா, தமன்னா ஆகியோர் மது அருந்தி ஆடுகிறார்கள். இந்த வீடியோவை வெளியிட்டுள் அவர் கூறியிருப்பதாவது, #Dhanush & #Tamannaah என்னம்மா இப்படி பானிரிங்கலேமா😂😂#SuchiLeaks என தெரிவித்துள்ளார்.

சுசித்ரா

சுசித்ரா ட்விட்டரில் பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முதலில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோரின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்டார்.

வீடியோ தனுஷ், அமலா பால் லீலைகள், பாடகி சின்மயி-அனிருத் லீலை வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். அவர் ட்விட்டர் கணக்கில் தினமும் ஒரு குண்டை போட்டு திரையுலகினரை கதிகலங்க வைக்கிறார்.

விவாகரத்து சுசித்ரா தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப் போகிறாராம். இன்றைய தேதிக்கு கோலிவுட் தவிர தமிழக ரசிகர்கள் அனைவரும் பேசுவது சுசித்ராவை பற்றி மட்டும் தான்.

Comments