மீண்டும் சட்டசபை கூட்டம் தொடங்கும்போது பல நிகழ்வுகள் நடைபெறும்.. மாஃபா பாண்டியராஜன் வார்னிங்

மனசாட்சி OneIndia News : சென்னை: சட்டசபை கூட்டத்தொடரின் போது பல நிகழ்வுகள் நடைபெறும் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மாஃபா பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் முதல் கூட்டம் நடத்தினார். அடுத்ததாக சேலத்தில் விரைவில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்ததும், பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தம் தொடங்கும். இன்றும் கூட குறைந்தது ஆயிரம்பேராவது எங்களுடன் வந்து இணைந்துள்ளனர். அதுபோன்ற சூழல் தொடரும்.

நிகழ்வுகள் நடைபெறும் இன்னும் 10 நாட்களில் சட்டசபை கூடியாக வேண்டும். அப்போது பல நிகழ்வுகள் அதில் நடைபெறும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 6 பேர் மட்டும் மாற்றி வாக்களித்திருந்தால் இன்று நிகழ்வுகள் மிக வித்தியாசமாக இருந்திருக்கும். இப்போது பலரின் மனசாட்சியை அது உறுத்திக்கொண்டுள்ளது.

மனசாட்சி தொகுதிகளில் மக்களால் அவர்கள் மனசாட்சி தட்டப்பட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வரும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஒரு குடும்ப பிடி அம்மாவின் ஆத்மா, அதிமுகவை ஒரு குடும்பத்தின் பிடியில் போக விடாது. பொதுக்குழுவை கூட்டினால் கூட பெருவாரியான ஆதரவு எங்களுக்கு இருப்பது தெரிந்துவிடும் என்பதால்தான் அவர்கள் அதை கூட்டாமல் தாமதம் செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் வாழ்த்து தேவையில்லை ஸ்டாலின் வரவேற்பை எதிர்பார்த்து ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதில்லை. அம்மாவின் ஆன்மாவால் உந்தப்பட்டு போராட்டம் நடத்த உள்ளோம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆரம்பித்ததும்தான் பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டது. எனவே இதில் அவர் தாமதம் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Comments