‛நீட்' தேர்வு நல்லது: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

தினமலர் செய்தி : சென்னை: ‛‛ தமிழக மாணவர்களுக்கு, ‛நீட்' தேர்வு நல்லது. வரும் காலத்தில் அதை வேண்டாம் என்று தமிழக அரசு கூறினால், அது லாயக்கற்ற அரசாக தான் இருக்கும்,'' என, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கல்வி தரம் தாழ்ந்து விட்டது

சென்னை விமான நிலையத்தில் இன்று(மார்ச் 4) பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களை திணிக்காது. ஆனால், ஒரு திட்டம் நல்லதா, கெட்டதா என்பதை மக்கள் ஆய்வு செய்யாமல் எதிர்ப்பது நல்லது அல்ல. தமிழகத்தில் கல்வியின் தரம் தாழ்ந்து போய் விட்டது. அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. மருத்துவ கல்விக்கான பொதுத் தேர்வான, ‛நீட்' தேர்வு வேண்டாம் என கூறுவது, நமது மாணவர்கள் தேசிய அளவில் போட்டி தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.

சிறுபான்மை மொழி மாணவர்கள் கடந்த ஆண்டு தமிழில் தேர்வு எழுதவில்லை. இந்த ஆண்டும் அவர்களுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக அவர்களுக்கு தமிழ் மொழி பாடம் எடுத்த தமிழக அரசின் தரம் இது தான். ‛நீட்' தேர்வு அடுத்த ஆண்டு வேண்டாம் என்றால் அதற்கான மாற்று திட்டம் என எதை வைத்துள்ளனர் என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். ‛நீட்' தேர்வே வேண்டாம் என்று கூறுவது, தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Comments