சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தனுஷின் அங்க அடையாளங்களை ஆராய்ந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தனுஷ் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் உடலில் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் நீதிமன்றத்தில் அறிக்கையில் தெரிய வந்தது. அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
Comments