இப்படி இவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் எதற்கும் பதில் அளிக்க முடியாமல், சசிகலா தரப்பு தடுமாறி வருகிறது. இதையெல்லாம், பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவே உணரத் துவங்கி உள்ளனர்.
இதனால் இந்த பிரச்னையை தொடர்ந்து தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தீர்மானித்துள்ள பன்னீர்செல்வம் தரப்பினர், சிந்திப்பீர்… மக்களே சிந்திப்பீர் என்ற தலைப்பிட்டு, ஒரு கோடிக்கும் கூடுதலனான அளவில், துண்டு பிரசுரங்களை அச்சடித்து, மக்கள் மத்தியில் கொடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், விரைவில் இந்த பணியை செய்ய, பன்னீர்செல்வம் தரப்பு, தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments