ரேசன் கடைகள் முன் போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை

தினமலர் செய்தி : சென்னை: மக்களுக்கு, ரேசன் கடைகளில் இருந்து உரிய பொருட்கள் வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களும் முறையாக கிடைக்கவில்லை. ரேசன் கடைகளில் ஆய்வு செய்து அறிக்கை தர தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பொருட்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ரேசன் கடைகள் முன் போராட்டம் நடத்தப்படும்.
பிறரின் கவனத்தை பெறவே திராவிட கட்சிகள் பற்றி பொன். ராதாகிருஷ்ணன் பேசி வருகிறார். நெடுவாசல் மக்கள், மத்திய அரசுக்கு எதிராக தான் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments