பொன்னாடைக்கு பதில் புத்தகம் புத்தகங்கள் தனது அறிவை மேலும் விசாலப்படுத்திக் கொள்ள உதவும் என்றும் தெரிவித்திருந்தார். எனவே தொண்டர்கள் பொன்னாடை, சால்வைக்கு பதில் புத்தகங்களை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.
தொண்டர்கள் வாழ்த்து இதைத்தொடர்ந்து அவரது பிறந்த நாளான இன்று திமுக தொண்டர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஏராளமான தொண்டர்கள் அவருக்கு புத்தகங்களை பரிசலித்து வருகின்றனர்.
குவிந்துள்ள புத்தகங்கள் இதனால் தலைமைக் கழகம் மற்றும் அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன. ஏராளமான தொண்டர்கள் வித்தியாசமான பல புத்தகங்கள் பல்வேறு வடிவங்களில் வழங்கினர்.
கருணாநிதியிடமிருந்து புத்தகம் பெற்ற ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் அவரிடமிருந்து நூறு பேர் என்ற புத்தகத்தை ஸ்டாலின் பரிசாக பெற்றார்.
குடும்பத்துடன் கேக் வெட்டிய ஸ்டாலின் தனது வீட்டில் மகன், மருமகள் பேரக்குழந்தைகள், சகிதமாக மனைவியுடன் கேக்கை வெட்டி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments